எண்ணாகமம் - the hand of...

18
எணாகம 20 வயதக மேபடவக தகதியானவக.கானா மதசதிக சறட,அகளவகட யத சவதக 20 வயதடடயவக அதக மேபடவக எவள எ சதாடக பாகப மோமச கடடளயிடபடா.இத சயறிடதிக உதவியாக ஒசவார மகாதிரதிலிரத ஒரவ சதர சயபடாக. 12 மகாதிரதிலிரத யத திகாக சதர சயபமடா எணிடக 603,550 ஆவ. மழவதோக ஏறகடறய 2 ிலிய சதாடக என கணகிடபடத.நாபத ஆக அடலத திரத வாடக வரலாடற கிற ஆகே. கால அடவனை யாதினை, நியாயபிைமாண ககா கபட . கி.ம. 1446 காதத-பாைா, வைாதை அனலச ஆைப கி.ம. 1443 இைதவலக காைானக நனைத. கி.ம.1406 பிைணி நியாயபிரோணடத சீனா ேடலயி சப சகாடாக (யாதிராகேமலவி யராகே ), அதபிப கானா மதசதிக திரபவதக ஆயதோனாக. (110). கானா எடலககான சிறிய பிரயாணகடள மதபிஎபமயா அவக கதரஎதிராக கிளபினாக. (1314) அதனா வனாதரதி 40 வரட அடலசடல சப சகாடாக.அதிகார 1536 பல நிகக இத அடலசலி காலபகதியி பதியபளன. இடவக யா ஆவிகரய நிலடேக சேய எதிப க இடடயி தோறியடத காபிகிறத.வாகபணபட மதசடத பாத பமய டாரேி இரபதட பதக மவிக வரகிறத. எதியவ;- மோமச மோமச தா இத பதகடத எதினா எபதகான கறிபக இத பதகதிமலமய காணபகிறன. (1:1; 33:2). மோமசயினா இத விபரக ககட சாசிக விபரோக சகாகபகிறன.

Upload: others

Post on 15-Oct-2020

0 views

Category:

Documents


0 download

TRANSCRIPT

  • எண்ணாகமம்

    20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தகுதியானவர்கள்.கானான் மதசத்திற்குள் சசன்றவுடன்,அங்குள்ளவர்களுடன் யுத்தம் சசய்வதற்கு 20 வயதுடடயவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் எவ்வளவு என்று சதாடக பார்க்கும்படி மோமச கட்டடளயிடப்பட்டார்.இந்த சசயற்றிட்டத்திற்கு உதவியாக ஒவ்சவாரு மகாத்திரத்திலிருந்தும் ஒருவர் சதரிவு சசய்யப்பட்டார்கள். 12 மகாத்திரத்திலிருந்தும் யுத்தத் திற்காகத் சதரிவு சசய்யப்பட்மடார் எண்ணிக்டக 603,550 ஆவர். முழவதுோக ஏறக்குடறய 2 ேில்லியன் சதாடக எனக் கணக்கிடப்பட்டது.நாற்பது ஆண்டுகள் அடலந்து திரிந்த வாழ்டக வரலாற்டற கூறுகின்ற ஆகேம்.

    கால அட்டவனை

    யாத்தினை, நியாயப்பிைமாணம் ககாடுக் கப்படல் .

    கி.மு. 1446

    காததஸ்-பார்ைா, வைாந்தை அனலச்சல் ஆைம்பம்

    கி.மு. 1443

    இஸ்ைதவலர்கள் காைானுக்குள் நுனைதல். கி.மு.1406

    பின்ைணி

    நியாயப்பிரோணத்டத சீனாய் ேடலயில் சபற்றுக் சகாண்டார்கள் (யாத்திராகேம்—மலவி யராகேம் ), அதன்பின்பு கானான் மதசத்திற்குத் திரும்புவதற்கு ஆயத்தோனார்கள். (1–10). கானான் எல்டலகளுக்கான சிறிய பிரயாணங்கடள முடித்தபின்பு எப்படிமயா அவர்கள் கர்த்தருக்கு எதிராகக் கிளம்பினார்கள். (13–14) அதனால் வனாந்தரத்தில் 40 வருடம் அடலச்சடலப் சபற்றுக் சகாண்டார்கள்.அதிகாரம் 15–36இல் பல நிகழ்வுகள் இந்த அடலச்சலின் காலப்பகுதியில் பதியப்பட்டுள்ளன. இடவகள் யாவும் ஆவிக்குரிய நிலடேக்கும் சேய எதிர்புக் கும் இடடயில் தடுோறியடதக் காண்பிக்கின்றது.வாக்குப்பண்ணப்பட்ட மதசத்டதப் பார்த்த படிமய கூடாரேிட்டு இருப்பதுடன் புத்தகம் முடிவிற்கு வருகின்றது.

    எழுதியவர்;- மோமச

    மோமச தான் இந்தப் புத்தகத்டத எழுதினார் என்பதற்கான குறிப்புகள் இந்த புத்தகத்திமலமய காணப்படுகின்றன. (1:1; 33:2). மோமசயினால் இதன் விபரங்களும் கண்கண்ட சாட்சிகளும் விபரோகக் சகாடுக்கப்படுகின்றன.

  • எண்ணாகேம்

    திராணி 1

    காலமும் இடமும்.

    கி.மு1446இல் யாத்திராகாேச் சம்பவங்கள் இடம்சபற்ற மபாதிலும்.புத்தகம் கி.மு. 1406இல் தான் எழுதப்பட்டது.மோமச நாளாந்தம் அடலச்சல் பிரயாணத்தின் பதிவுகடளப் நாமளட்டில் பதிவு சசய்திருந்தார், அதனால் 40 வருட காலப்பதிவுகளும் 1406இல் இறுதி வடிவோகப் பதிவு சசய்யப் பட்டுள்ளது.

    தநாக்கம்

    • தன்னுடடய ேக்கள் கீழ்ப்படியாோல் இருந்தமபாது கடலக்கப்பட்டார்கள் என்படதக் காண்பிப்பதற்காகவாகும்.

    • சிவப்பான ஒரு கிடாரிடய யும் சவண்கலச்சர்ப்பத்டதயும் அடடயாளப்படுத்தி இமயசுக் கிறிஸ்த்துவின் பலி நிழலாட்டோக கூறப்பட்டுள்ளது. (19: 9).

    • கர்த்தருடடய இயல்பான குணத்டத சதாடர்ந்து சவளிப்படுத்திக் சகாண்டிருபதற்காக

    » அவருடடய உடன்படிக்டகடய பாதுகாக்கும் குணம்.

    » மகாபத்திற்கும் கிருடபக்குேிடடமய தளம்பலில்லாத தன்டே

    சுருக்கம்

    1. இஸ்ரமவலர்கள் சீனாய் ேடலயில்: Preparationஆயத்தப்படல் (1:1–10:10) 2. ஜனங்கடளத் சதாடகயிடல் . (1) 3. ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயேிறங்குதல் (2) 4. மலவியர்கள் சதாடகயிடப்பட்டு, கடடேகள் சகாடுக்கப்படல் (3–4) 5. பரிசுத்தத்தின் தன்டேகள் (5) 6. நசமரய விரதம். (6) 7. இஸ்ரமவல் தடலவர்களிடேிருந்து ஆசாரிப்புக் கூடாரத்திற்கான காணிக்டககள். (7) 8. மலவியர்களுக்கான பிரதிஷ்டட (8) 9. அக்கினி ஸ்தம்பமும், சசௌளி எக்காளமும். (9:1–10:10) 10. சீனாயிலிருந்து காமதஸ்வடர : விரக்தியடடதல் (10:11–20:13) 11. சீனாய் ேடலயிலிருந்து சவளிமயறல். (10:11-36) 12. முடறப்பாடுகளும் தீர்வுகளும்.(11) 13. ேீரியாமும், ஆமரானும் மோமசக்கு எதிராகப் மபசுதல். (12) 14. காமதஸ்- பர்னாவில் முரண்படுதல். (13–14) 15. மேலதிகோன நியாயப்பிரோணம். (15) 16. அபிராம், தாத்தான், மகாரா என்பவர்களின் முரண்பாடுகள். (16) 17. ஆமரானுடடய மகால் துளிர் விடல். (17) 18. மலவியர்களின் கடடேகள். (18) 19. சிவப்பான ஒரு கிடாரியின் சாம்பலால் பரிசுத்தப்படுத்தல். (19)

  • எண்ணாகேம்

    திராணி 2

    20. மோமச கன்ேடலடய அடித்தல். (20:1-13) 21. காமதசிலிருந்து மோவாப் வடர : எதிர்பார்ப்பு (20:14–36:13) 22. இஸ்ரமவலர்களுக்கான பாடதடய ஏமதாம் ேறுத்தல். (20:14-21) 23. ஆமரானின் ேரணம். (20:22-29) 24. சவண்கலச் சர்ப்பம். (21:1-9) 25. சீசகாடனயும், ஓக்டகயும் இஸ்ரமவல் சவற்றி சகாள்ளல். (21:10-35) 26. பாலாக்கும் பாலாமும். (22–24) 27. இஸ்ரமவலர்கள் மோவாப்பியர்களால் சவற்றி சகாள்ளப்படல். (25) 28. இரண்டாம் தடடவயாக ஜனங்கள் சதாடகயிடப்படல். (26) 29. மோமசடய மயாசுவா சவற்றி சகாள்ளல். (27) 30. ஆராதடனக்கும், சபாருத்தடனகளுக்குோன ஒழுங்குவிதிகள். (28–29) 31. சபாருத்தடனக்கான ஒழுங்கு விதிகள். (30) 32. ேீதியானியர்கடள இஸ்ரமவல் சவற்றி சகாள்ளல். (31) 33. மகாத்திரங்கள் குடியேர்த்தப்படல். (32) 34. வனாந்தரப் பிரயாணத்தின் ேீள்பார்டவ (33) 35. கானானின் குடியேர்வு விபரிக்கப்படல். (34–36)

    இஸ்ைதவலர்கள் சைீாய் மனலயில் (1:1–10:10)

    ஆயத்தப்படுதல்.(1:1–10:10)

    1:1-46. முதலாவது கணக்ககடுப்பு; -20 வயதுக்கு தமற்பட்டவர்கள் தகுதியாைவர்கள்.

    கானான் மதசத்திற்குள் சசன்றவுடன் ,அங்குள்ளவர்களுடன் யுத்தம்சசய்வதற்கு 20 வயது டடயவர்களும் அதற்கு மேற்பட்டவர்களும் எவ்வளவு என்று சதாடக பார்க்கும்படி மோமச கட்டடளயிடப் பட்டார்.இந்த சசயற்றிட்டத்திற்கு உதவியாக ஒவ்சவாரு மகாத்திரத்திலிருந்தும் ஒருவர் சதரிவுசசய்யப்பட்டார்கள். 12 மகாத்திரத்திலிருந்தும் யுத்தத்திற்காகத் சதரிவு சசய் யப்பட்மடார் எண்ணிக்டக 603,550 ஆவர். முழவதுோக ஏறக்குடறய 2 ேில்லியன் சதாடக எனக் கணக்கிடப்பட்டது.

    1:47-54 .மலவியர்கள் ேற்றக் மகாத்திரங்களுடன் மசர்த்து எண்ணப்படவில்டல, காரணம் அவர்கள்,ஆசாரிப்புக் கூடாரத்திற்குப் சபாறுப்பானவர்கள், அவர்கள் யுத்த வரீர்களல்ல

    2:1-34 .இைண்டு மில்லியன் மக்களுக்கு கூடாைம். கர்த்தர் ஒழுங்கடேப்பின் பிரகாரம் முகாம் அடேக்கும்படி விரும்பினார்.ஆசாரிப்புக் கூடாரத்டதடேயப்படுத்தி ஒவ்சவாரு மகாத்திரத்திற்கும் உரிய இடம் ஒதுக்கப்பட்டது.. ஒவ்சவாரு மகாத்திரத்திற்கும் அவர்கடள அடடயாளம் காணும் படியாக சகாடி அடேக்கப்பட்டது. (2:2). சதாடக பார்ப்பதற்கு ஒவ்சவாரு மகாத்திரத்திலிேிருந்து சதரிவுசசய்யப்பட்டவர்கமள அந்தக் மகாத்திரங்கடள வழிநடத்துவதற்கும் நியேிக்கப்பட்டார்கள். முகாடேவிட்டு சவளிமயறும்மபாது எவ்வாறாக ஒவ்சவாரு மகாத்திரமும் புறப்பட மவண்டும் என்ற ஒழுங்குகளும் திட்ேிடப்பட்டன. (2:9, 16, 24, 31)

  • எண்ணாகேம்

    திராணி 3

    3:1-4 ;அவருனடய இைண்டுபிள்னைகள் ஜிவிக்கிறார்கள். கீழ்ப்படியாடேயின் காரணோக அபியூவும், நாதாப்பும் ேரித்தார்கள் (மலவி 10:1-7) ஆமரானுக்கு எலிமயசர், இத்தாேர் என்னும் இரண்டுபிள்டளகள் ஆசாரிய ஊழியத்தில் உதவிசசய்வதற்கு இருந்தார்கள்.மோமச தனது குடிம்பத்டத பற்றி குறிப்பிடவில்டல,ஊழியத்தில் பதவியும் குடுக்கவில்டல,தனக்மகன்று உடடேயும் மசர்கவில்டல.மோமச அர்ப்பணிப்பு,தியாகம் நிடறந்த ஊழியக்காறன்.

    3:5-13: தலவியர்கள் என்னுனடயவர்கள், அவர்கள் எனக்கு மசடவ சசய்வார்கள் ஏசனனில் எகிப்திலிருந்து புறப்பட்டமபாது இஸ்ரமவலர்கடள விடுதடலயாக்கினார், அவர்களுடடய முதற்மபறானவர்கள் கர்த்தருக்கு உரியவர்கள். (யாத். 13:1-2, 11-16; 22:29).இப்மபாது மலவி மகாத்தி ரத்தின் முதற்மபறான ஆண்கள் யாவரும் எல்லாக் மகாத்திரத்தின் முதற்மபறானவர்கள் எனறு ஏற்றுக் சகாண்டு ஆமரானுக்கு உதவியாளர்களாக நியேிக்கப்பட்டார்கள்.

    3:14-39 “ இப்தபாது தலவியர்கள் கதானகயிடப்படலாம்”.மலவியர்கடள சதாடகயிடும்படி கர்த்தர் மோமசய்க்கு கட்டடளயிட்டார். அவர்கள் மலவியின் மூன்று பிள்டளகளின் படி மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டார்கள்.அவர்களின் நாேங்களாவன சகர்மசான், மகாகாத், சேராரி என்படவகளாகும் மோமசயும் (ஆதைானும் தகாகாத் பைம்பனையிைைாவர். யாத். 6:16-20;) மலவி மகாத்திரத்தின் சதாடக பார்த்தல் வித்தியாசோனது, மலவியின் ஆண்பிள்டளகள் ஒரு ோதமும் அதற்கு மேற்பட்வர்களும் சதாடகயிடப்பட்டார்கள். தகாகசான் குடும்பத்டதச் மசர்ந்தவர்கள், ஆசாரிப்புக் கூடாரத்தின் மேற்குப் பக்கோக குடியேர்த்தப்பட்டார்கள். இவர்கள் திடரச்சீடலகளுக்கும், ேடறப்புக்களுக்கும் சபாறுப்பாக இருப்பார்கள். தகாகத் குடும்பத்தவர் கள் சதற்குப் பக்கோக குடியேர்த்தப்பட்டார்கள், இவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தில் காணப்படும் சபாருட்களுக்குப் சபாறுப்பாக இருப்பார்கள்—உடன்படிக்டகப்சபட்டி, மேடச, குத்துவிளக்கு, பலிப ீடம், ேற்றும் பாத்திரங்கள் என்பனவாகும். கமைாரி குடும்பத்தவர்கள் வடக்குப்பக்கோக குடிய ேர்த்தப்பட்டார்கள், இவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தின் யன்னல், கதவுமபான்றவற்றிற்கும் சவளிப்பிரகாரத்திற்கும் சபாறுப்பாயிருப்பார்கள். மோமச,ஆமரான், எலிமயசர், இத்தாேர் ஆகி மயார் ஆசாரிப்புக் கூடாரத்திற்கு கிழக்குப்பக்கோக தங்கள் கூடாரத்டதயும் வாசல்கடளயும் அடேத்தார்கள், அவர்களின் ஒருோதமும், அதற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்டக 22,000 ஆகும்.

    3:40-51 மீட்பு;- இப்மபாது இஸ்ரமவலர் ேக்களின் முதற் பிறந்த ஆண்பிள்டளகள் ஒருோதமும் அதற்கு மேற்பட்டவர்கடளயும் சதாடக பார்த்தான் மலவியர்களின் முழுத் சதாடகயிலும் 273 மபர் அதிகோக உள்ளனர். (3:5-13 ) இந்த மேலதிகோன 273 மபரும் முதற்பிறந்தவர்கள் ஐந்துமசக்கல் சவள்ளி சகாடுத்து ேீட்கப்பட்டவர்களாவர்.

    4:1-49 தலவியர்கைின் இைண்டாம் கதானக மதிப்பீடு;- 30-50 வயதுக்குட்பட்ட எல்லா ஆண்க ளும் இரண்டாம் சதாடக ேதிப்படீ்டிற்குட்பட்டார்கள். இவர்கள் வயதின் அடப்படடயில் ஆசாரிப்புக் கூடாரப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள், இவர்களின் முழுத் சதாடகயும் 8,580.மபராவர்.ஆசரிப்புக் கூடாரத்திமல மகாகாத் புத்திரரின் பணிவிடட ேகாபரிசுத்தோன டவகளுக்குரியது,இவர்கள் ஆசாரிப்புக் கூடாரத்தின் தளபாடங்களுக்கும் திடரச்சீடல அலங் காரங்களுக்கும் சபாறுப்பானவர்கள். விமேசோக ஆசாரிப்புக் கூடாரம் சகாண்டு சசல்லப்

  • எண்ணாகேம்

    திராணி 4

    படும்மபாது அதன் தளபாடங்கள்யாவும் பக்குவப்படுத்திக் சகாண்டு சசல்லுதல் இவர்களின் சபாறுப்பாகும்.இந்தப் பணிகள் யாடவயும் எலிமயசர் மேற்பார்டவ சசய்து ககாள்ளுவார்.(4:16) தகார்தசைியர்களுனடயதும், சோராரியர்களுடடயதுோன கடடேகள் ேீண்டும் வலியுறுத் தப்பட்டுள்ளது.இத்தாேர் இந்தமவடலகள் யாவற்டறயும் மேற்பார்டவ சசய்வதற்காக நியேிக் கப்பட்டார்.

    5:1-4 .அசுத்தப்பட்டவர்கள் புறம்பாக்கப்படல் தவண்டும்.இஸ்ரமவர்களுடன் கர்த்தர் இருப்பதால்,யார்யாசரல்லாம் மநாயினால் அல்லது ேரணவடீ்டினால் அசுத்தேடடந்து ள்ளார்மளா, அவர்கள் எல்லாரும் முகாம் துப்பரவாக்கும் வடர சவளிமயற்றப்படல் மவண்டும்.

    5:5-10 பாவத்னத அறிக்னகயிடுதலும்,அபைாதமும் 20% அதிகமும் கசலுத்தலும். மலவியராகேத்தின் 64 : 1-7 இல் கூறப்பட்டது மபால் களவு அறிக்டகசசய்ப்படல் மவண்டும், களவு எடுக்கப்பட்ட சபாருள் திரும்ப ஒப்படடக்கப்படல் மவண்டும்,அத்துடன் நஸ்ட ஈடாக மேலதிகோகப் சபறுேதியின் 20%மும் சசலுத்துதல் மவண்டும்.களவு சகாடுத்தவர் ேரித்தி ருந்தால், அவருக்குரிய சபாருள் ஆசாரியனுக்குரியதாகும்.

    5:11-31 கவகுைியா அல்லது பாவியா? பரிதசாதனை அதனைச் கவைிக்காட்டும்.

    தன்னுடடய ேடனவி பாவம் சசய்துவிட்டாள் என்று ஒரு ேனிதன் சந்மதகப்பட்டால், ஆசாரியன் பரிசுத்த தண்ணடீரயும் புழுதிடயயும் கலந்து அவளுக்குக் குடிக்கக் சகாடுப் பான்,இந்தப்பானத்டதக் குடித்தபிற்பாடு, அவளது உடம்பில் ஏற்படும் ோற்றம், அவள் சவகு ளியா அல்லது பாவியா என்படத சவளிக்காட்டும். இது கர்த்தருடடய நியாத்தீர்ப்டப சவளி ப்படுத்தும், அவள் பாவம் சசய்யாவிடல் அவளது உடம்பில் மநாய்கள் எற்பட ோட்டாது.

    6:1-21 .நசதையப்பானத;-குறித்த காலத்திற்கு குறிப்பிட் சபாருத்தடன சசய்தவர்கள் நசமரய விரதேிருப்மபார் எனப்படுவர். இந்தப் சபாருத்தடனக் காலங்களில் எதுவித ேதுபானமும் அருந்துதல் கூடாது, தன்னுடடய தடலேயிடர சவட்டுதல் கூடாது, எதுவித பிணத்டதயும் சதாடக்கூடாது என்பன கண்டிப்பாகக் கடடப்பிடிக்கப்படல் மவண்டும். இவருடடய தடல ேயிடரசவட்டி, அதடன சநருப்பில் எரித்தபிற்பாடு அவர் சாதாரண வாழ்க்டகடய மேற் சகாள்ளலாம்.

    6:22-27 ஆசாரியர்கைிடமிருந்து ஜைங்களுக்காை விதேசித்த ஆசரீ்வாதம். கர்த்தர் மோமசக்கு விமேசித்த ஆசீர்வாதங்களுக்கான வார்த்டதகடளக் சகாடுத்தார்.அவர்களின் பாதுகாப்புக்காவும்,கிருடபக்காகவும்,சோதானத்திற்காகவும், இவ்வாறாக ஆசாரியர்கள் ஜனங் கடள ஆசீர்வதிப்பார்களாக.

    7:1-88 ஆசாரிப்புக் கூடாைத்திற்காை ககானடகள். தனலவர்களுக்காை மைபுரினமகள் .மோமச,ஆசாரிப்புக் கூடாரத்டத நிறுத்தி முடித்த அந்த நாளில், 12மகாத்திரங்களின் தடல வர்களும் முதலாவது கணக்சகடுப்புக்கு உதவி சசய்தார்கள். (1:5-15), அந்த நாளில் காணி க்டககடளக் சகாண்டுவந்தார்கள். இது யாத்திரகாேத்திலும் கூறப்பட்டுள்ளது. 40:17;. ஒவ்சவாரு தடலவர்களும் காடளகடளக் சகாண்டுவந்தார்கள் அடவ சோத்தோக 12 அகும். தங்கள் காணிக்டகயாக, ஆறு கூண்டு வண்டில்கடளயும், பன்னிரண்டு ோடுகடளயும், இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்சவாருவண்டிலும், ஒவ்சவாருபிரபுக்கு ஒவ்சவாருோடுோக, கர்த்தருக்குச் சசலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக்சகாண்டுவந்தார்கள். (7;3).இரண்டு வண்டில்கள் மகாசசா

  • எண்ணாகேம்

    திராணி 5

    னியர்களுக்கு,ஆசாரிப்புக் கூடாரத்தின் திடரச் சீடலகளடகடளயும், மூடுதிடரகடளயும் சகாண்டு சசல்வதற்கும், சோமராரியர்களுக்கு நான்கு வண்டில்களும், எட்டு ோடுகளும் சகாடு க்கப்பட்டன, இவர்கள் ஆசாரிப்புக்கூடாரத்தின் பலடககடளக் சகாண்டு சசல்வதற்காக மகாகாத்தின் புத்திரர் தங்கள் மதாள்களில் ஆசாரிப்புக் கூடாரத்தின் தளபாடங்கள் யாவற்டறயும் சகாண்டு சசல்வார்கள். (4:15; 7:9), இவர்களுக்கு வண்டில்கமளா காடளகமளா சகாடுக்கப் படவில்டல.தகன பலி 12 நாட்களுக்குக் சகாண்டாடப்படும். (7:10-83). ஒவ்சவாரு நாளும் மகாகாத்திரத் தடலவர்களால் சகாடுக்கப்பட்ட பரிசில்கள் குறிப்பிடத்தக்கடவயாகும். ஒவ்சவாருசகாடடடயயும் கர்த்தர் சபறுேதிப்படுத்தினார். பலிபடீம் அபிமேகம் பண்ணப்பட்ட மபாது, இஸ்ரமவல் பிரபுக்களால் சசய்யப்பட்ட பிரதிஷ்டடயாவது: சவள்ளித் தாலங்கள் பன்னிரண்டு , சவள்ளிக் கலங்கள் பன்னிரண்டு, சபான்தூபகரண்டிகள்பன்னிரண்டு. ஒவ்சவாரு சவள்ளித்தாலம் நூற்று முப்பது மசக்கல்நிடறயும், ஒவ்சவாரு கலசமும் எழுபது மசக்கல் நிடறயுோக, இந்தப்பாத்திரங்களின் சவள்ளிசயல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் மசக்கல் கணக்கின்படி இைண்டாயிைத்து நானூறு தசக்கல் நினறயாயிருந்தது. தூபவர்க்கம் நிடறந்த சபான் தூப கரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்சவான்று பரிசுத்தஸ்தலத்தின் மசக்கல்கணக்கின்படி பத்துச் மசக்கல்நிடறயாக, தூப கைண்டிகைின் கபான்கைல்லாம் நூற்றிருபது தசக்கல் நினறயாயிருந்தது.

    7:89–8:4 உடன்படிக்னகப் கபட்டியின் தமலிருந்து சத்தத்னதக் தகட்பான். மோமச மதவமனாமட மபசும்படி ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரமவசிக்கும் மபாது, தன்மனாமட மபசுகிறவரின் சத்தம் சாட்சிப் சபட்டியின் மேலுள்ள கிருபாசனோன இரண்டு மகருபனீ்களின் நடுவிலிருந்துண்டாகக் மகட்பான்; அங்மக இருந்து அவமனாமட மபசுவார். நீ விளக்குகடள ஏற்றும்மபாது ஏழுவிளக்கு களும் விளக்குத்தண்டிற்கு மநமர எரிய மவண்டும் என்றுசசால் என்றார். கர்த்தர் மோமசக்குக் கட்டடளயிட்ட பிரகாரம் ஆமரான் சசய்து, விளக்குத் தண்டிற்கு மநமர ஒழுங்காக அதின் விளக்குகடள ஏற்றினான். இந்தக்குத்துவிளக்கு, அதின்பாதம் முதல் பூக்கள் வடரக்கும் சபான்னி னால் அடிப்பு மவடலயாய்ச் சசய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோமசக்குக் காண்பித்த ோதிரியின் படிமய அவன் குத்துவிளக்டக உண்டாக்கினான்.

    8:5-19 தலவியரின் பிைதிஷ்னட;-தசனவக்காக சுத்திகரிக்கப்படல். மலவியர்கள் சுத்திகரிப்புக்காக நீரினால் சதளிக்கப்படவும், அவர்கள் சர்வாங்க சவரம் பண்ணி, தங்கள் வஸ்திரங்கடளத் மதாய்த்து, தங்கடளச் சுத்திகரிக்கக்கடவர்கள். பின்பு இஸ்ரமவல் புத்திரர் தங்கள் டககடள மலவியர்மேல் டவக்கக்கடவர்கள். மலவியர் கர்த்தருக்குரிய பணிவிடட சசய்யும்சபாருட்டு, ஆமரான் அவர்கடள இஸ்ரமவல் புத்திரரின் காணிக்டகயாகக் கர்த்தருக்கு முன்பாக அடசவாட்டப்படும் காணிக்டகயாய் நிறுத்தக்கடவன். (8:11) மலவியர்கள் ேற்றக் மகாத்திரத்தாருடய முதற்பிறப்பிற்காக காணிக்டகயாக எண்ணக்கடவர்கள்.(3:5-13). அதன் பின் மலவியர் தங்கள் டககடளக் காடளகளுடடய தடலயின் மேல் டவப்பார்களாக; பின்பு நீ மலவியருக்காகப் பாவ நிவிர்த்தி சசய்யும் சபாருட்டு, கர்த்தருக்கு அடவகளில் ஒன் டறப்பாவ நிவாரணபலியாகவும், ேற்சறான்டறச் சர்வாங்கதகன பலியாகவும்சசலுத்தி, மலவியடர ஆமரானுக்கும் அவன் குோரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்கடளக் கர்த்தருக்கு அடசவாட்டப்படும் காணிக்டகயாக்கி, இப்படி நீ மலவியடர இஸ்ரமவல் புத்திரரிலிருந்து பிரித் சதடுக்கக்கடவாய்; மலவியர் என்னுடடயவர்களாயிருப்பார்கள்.

  • எண்ணாகேம்

    திராணி 6

    8:20-26 தலவியர்கைின் கடனமகள். பரிசுத்தப்படுத்தப்பட்டு ,கர்த்தருக்குப் பிரதிஷ்டட சசய்யப் பட்டு மலவியர்கள் தங்கள் கடடேகடளயும் சபாறுப்புக்கடளயும் எடுத்துக் சகாள்வார்கள். 4;3 இல் 30வது வயதில் இவர்கள் மசடவடயத் சதாடங்குவார்கள்.அமதமநரம் 8; 24 இல் அவர்கள் 25 வயதில் மசடவடயத் சதாடங்குவார்கள் என்றும் கூறுகின்றது. இந்த 5 வருடங்களும் பயிற்சிசபறும் காலோக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இடளப்பாறும் வயதாக 50வயது குறிக்கப்பட்டுள்ளது.

    9:1-14 பஷ்கா;- கட்டனைகள், நீடிப்புகள், ஆனால் எதுவும் நீக்கப்படாது. எகிப்டதவிட்டு இஸ் ரமவலர்கள் புறப்பட்டு ஒரு வருடம் கடந்த நிடலயில்.இது வருடத்தின் முதலாம் ோதம்( ோர்சு—ஏப்ரலில் என நம்பப்படுகின்றது) இதன் 14ம் திகதியில் பஷ்கா பண்டிடக நிடனவு கூரப்பட்டு, அவர்களுடடய விடுதடலடய ஞாபகப்படுத்தல் மவண்டும். முகாம்களில் பிமர தங்களால் தீட்டுப்பட்டவர்கள் பஸ்காக் சகாண்டாட்டங்களில் பங்குபற்றக் கூடாது. அவர்கள் குறித்து என்ன சசய்வது என்று மோமசயிடம் மகட்கப்படல் மவண்டும். அவர்கள் ஞாயோன காரணம் இருந்து பஸ்காக சகாண்டாடாேல் இருந்தால், ஒருோதம் கழித்து அதடனக் சகாண் டாட முடியும் என்று கர்த்தர் மோமசக்கு கூறியுள்ளார். தான் விரும்பி சகாண்டாட்டத்தில் பங்குபற்றாேல் இருந்தால் அவர் சவளிமயற்றப்பட மவண்டியவராவர், அந்நியர், பஸ்க்காடவக் சகாண்டாட விரும்பினால், அவர் இஸ்மவலர்களுக்குரிய நிபந்தடனகடளக்டகக் சகாள்ளல் மவண்டும். (.யாத் 12:48-49)

    9:15-23 தமகம் ;- இது நகர்ந்தால் அவர்கள் நகர்வார்கள்., இது நின்றால் அவர்கள் நிற்பார்கள். மேகஸ்தம்பமும் அக்கினிஸ்தம்பமும் வழிகாட்டியபடிமய இஸ்ரமவலர்கள் வனாந்தரத்தில் பிரயாணம் சசய்தார்கள்..(யாத் 13:21-22; 40:34-38). ஆசாரிப்புக் கூடாரத்தின் ேீது மேகஸ்தம் நிடலத்திருக்குோயிருந்தால் அந்த இடத்தில் இஸ்ரமவலர்கள் முகாேிடுவார்கள். எப்மபாது திரும்பவும் மேகஸ்தம்பம் நகரத் சதாடங்குமோ அப்மபாது கூடாரங்கடளக் கழற்றிக் சகாண்டு பிரயாணத்டதத் சதாடங்குவார்கள்.

    10:1-10 கவள்ைி பூரினககைின் வித்தியாசமாை சத்தங்கள். ஜனங்களுடன் சதாடர்பு சகாள்வதற்காக இரண்டு சவள்ளிப் பூரிடககள் சசய்யப்பட்டன.இரண்டு பூரிடககளும் முழங்கும்மபாது ஜனங்கள் எல்லாரும் ஆசாரிப்புக் கூடாரத்தில் ஒன்றுமசரல் மவண்டும். ஒரு பூரிடக ேட்டும் ஒலிக்கும்மபாது தடலவர்கள் ேட்டும் ஒன்றுமசரல் மவண்டும்.சபருஞ்சத்தம் சிறிதாக ஊதும்மபாது ((10:6) கூடாரத்டதப் பிடுங்கிக் சகாண்டு பிரயாணத்டதத் சதாடங்கக் கடவர்.

    சைீாயிலிருந்து காததஸ்வனை;- மைமுறிவு 10:11–20:13)

    10:11-36 சைீாயிலிருந்து புறப்படுதல்.;-மேகஸ்தம்பம் நகரும்மபாது அவர்களும் நகருவார்கள். எகிப்திலிருந்து புறப்பட்ட நாளிலிருந்து இரண்டாம் வருேம் இரண்டாம் ோதம் 20ம் திகதி மேகஸ்தம்பம் நகரத் சதாடங்கியது., அதனால் இஸரமவலர்கள் கூடாரங்கடளப் பிடுங்குக் சகாண்டு பிரயாணத்டதத் சதாடங்கினார்கள் முகாம்களின் வரிடசயின்படிமய அவர்களின் புறப்படுதல் ஆரம்போனது. புறப்படுதடல யூதா, இசக்கார்,சசபுசலான் மகாத்திரங்கள் ஆசாரி ப்புக் கூடாரத்தின் கிழக்குப்பக்கத்தில் இருந்தவர்கள் புறப்படுதடல வழிநடத்தினார்கள் .மகாசசானியர்களும்,சோசராரியர்களும் அதடனப் பின் சதாடர்ந்து ஆசாரிப்புக் கூடாரத்

  • எண்ணாகேம்

    திராணி 7

    தட்டுமுட்டுக்களுடன் புறப்பட்டார்கள்.அதன் பிற்பாடு ரூபன் ,சிேிமயான், காத் என்னும் மகாத் திரத்தார் சதற்கிலிருந்து புறப்பட்டார்கள்.அதன்பிற்பாடு மகாத்தியர்கள் ஆசாரிப்புக் கூடாரத் தளபாடங்களுடன் புறப்பட்டார்கள்.அதன் பிற்பாடு எப்பிராயமீ், ேனாமச, சபன்யேீன் மகாத்தி ரங்கள் மேற்கிலிருந்து புறப்பட்டன. தான், ஆமசர்,நப்தலி,என்பவர்கள் சதற்கிலிருந்து புறப்ப ட்டார்கள் .மோமச ேீதியான் மதசத்து உறவினராகிய மகாபாப் என்பவடர இஸ்ரமவலர்களுடன் இடணயும்படி மவண்டிக் சகாண்டார். மேகஸ் தம்பம் நகரும்மபாது இஸ்ரமவலர்கள் முகாடே விட்டுப்புறப்படல் மவண்டும். உடன்படிக்டகப் சபட்டியும் ஆசாரிப்புக்கூடாரமும் அவர்களுடன் சகாண்டு சசல்லப்படும்.மோமச சஜபத்துடன் “ கர்த்தாமவ எழும்பும், உம்முடடய எதிரிகள் சிதறடிக்கப்படுவார்கைாக, உம்முனடய சமூகத்னதவிட்டு அவர்கள் ஓடிப் தபாவார்கைாக என்று சஜபிப்பார். உடன்படிக்டகப்சபட்டி தரித்து நிற்கும்மபாது, மோமச “ ஓ கர்த்தாதவ , எண்ணுக் கடங்காத இஸ்ைதவலர்கள் மத்தியில் திரும்பும் என்று கஜபம்கசய்வார்.

    11:1-3கர்த்தைனடய தகாபத்தின் அக்கிைி வாைத்திலிருந்து இறங்கியது.ஜனங்கள் பிரயாணம் சதாடங்கி சில ேணிமநரத்தில் ஏமதா சில காரணங்களுக்காக கர்த்தரிடம் முடறயிட்டார்கள் கர்த்தருக்கு அவர்களின் முடறயடீுகள் மகாபத்டத ஏற்படுத்தியபடியால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி சவளிப்புறத்திலிருந்த சிலடரப் பட்சித்தது.ஆனால் மோமச அவர்களுக்காக மவண்டுதல் சசய்தமபாது அந்த அக்கினி அவிந்து மபாயிற்று. 11:4-23 “அந்த பனைய நாட்கைின் அடினமத்தைம் நல்லது” என்றார்கள். இப்சபாழுது நம்முடடய உள்ளம் வாடிப்மபாகிறது; இந்த ேன்னாடவத் தவிர, நம்முடடய கண்களுக்கு முன்பாக மவசறான்றும் இல்டலமய என்று சசான்னார்கள். இடறச்சிக்காக அழுதார்கள். உம்முடடய கண்களிமல எனக்குக் கிருடப கிடடத்ததானால், இப்படி எனக்குச் சசய்யாேல், என் உபத்திரவத்டத நான் காணாத படிக்கு இப்சபாழுமத என்டனக் சகான்றுமபாடும் என்று மவண்டிக் சகாண்டான் அப்சபாழுது கர்த்தர் மோமசடய மநாக்கி: இஸ்ரமவல் ஜனங்களுக்கு மூப்பரும் தடலவருோனவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாமய, அந்த மூப்பரில் எழுபது மபடரக் கூட்டி, அவர்கடள ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்மக உன்மனாமட கூட வந்து நிற்கும்படி சசய்.கர்த்தர் இஸ்ரமவலர்களுக்கு இடறச்சி சகாடுக்கப்படும் என்று வாக்களித்தார். ஆனால் அந்த இடறச்சி அவர்களுக்கு அருவருப்பாக இருக்கும்.

    11:24-30 “அவர்கள்ஆவிக்குரியவர்கைாக இருப்பனத நான் விரும்புகிதறன்” சதரிவு சசய்யப் பட்ட 70 மபர்ேீதும் கர்த்ர் கூறியபடி தீர்க்கதரிசனம் சசால்ல ஆரம்பித்தார்கள். ேற்றவர்கள் தீர்க்கதரிசனம் சசால்வடத நிற்பாட்டினர். பாடளயத்தில் இருந்த எல்தாத்,மேதாத்தும் தீர்க்கதரிசனம் சசான்னார்கள்.மோமச, ேற்றவர்கள் தீர்க்கதரிசனம் சசால்வடத நிற்பாட்டினார் என்று மயாசுவா கருதினார்.மோமச அதடன ேறுத்து, எல்மலாரும்,முடறயிடுவடத நிறுத்தி, ஆவியில் நிடறந்தால் நல்லது என்று கூறினார்.யாவரும் கர்த்தருக்கு உபமயாகப்பட மவண்டும் ஆவிக்குரிய வரங்கடள சபற மவண்டும் என வாஞ்டச சகாண்ட மோமச.

    11:31-35 .சாப்பாட்டு தமனசயில் மைணம். வாக்குப்பண்ணின படி இடறச்சிக்காக சபருந் சதாடகயான காடடகடளக் கர்த்தர் அனுப்பினார்.அடத அவர்கள் அனுபவித்துச் சந்மதாேோக இருக்டகயில்,கர்த்தர் கூறியபடிமய சகாள்டளமநாடய அனுப்பினார், அவர்களில் அமநகர் ேரித்தார்கள்.

  • எண்ணாகேம்

    திராணி 8

    12:1-16 உலகில் ேிகவும் தாழ்டேயான ேனிதன் ேீது குற்றம் கண்டுபிடித்தார்கள்.மோமசயின் சசாந்த சமகாரியும், சமகாதரனுோன ேீரியாமும், ஆமரானும் , எதிமயாப்பிய சபண்டணத் திருேணம் முடித்ததாக குற்றம் சாட்டினார்கள். அவர்களும்,மோமசயின் தடலடேத்துவ பங்க ளிப்டபக் குறித்து சபாறாடே சகாண்டிருந்தார்கள். ஆனாலும் மோமச உலகிமலமய ேிகவும் தாழ்டேயுள்ள ேனிதனாக இருந்தார். (12:3)!மோமசக்கு எதிராகப் மபசியவர்கடள கர்த்தர் கடு டேயாகத் தண்டித்தார். ேீரியாம் குஷ்டமராகியானாள். மோமச ேீரியாேிற்காக சஜபம் சசய்தார் அவள் சுகோனாள், ஆனாலும் 7 நாள்கள் கூடாரத்டத விட்டு விலக்கப்பட்டிருந்தாள். ேிரியாம் மசர்த்துக் சகாள்ளப்படுேட்டும் ஜனங்கள் பிரயாணம் பண்ணாதிருந்தார்கள்.

    13:1-20 “பாைான்வைாந்தைத்தில் இருக்கிற காததசு” கானான் குடியிருப்புக்கு ஏற்றதா? காமதஸ் பாரானில் முகாேிட்டிருக்கும் மபாது, மோமச ஒவ்சவாரு மகாத்திரத்திலிருந்தும், 12 மபடரத் சதரிவு சசய்து கானானுக்குள் சசன்று அதடன ஆராய்ந்து வரும்படியும் அங்குள்ள ேக்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற தகவல்களுடனும் ,அந்த நிலத்தின் வளம்குறித்தும் , தாவரங்களின் சசழிப்புப் பற்றியும் ஆராய்ந்துவரும்படி கூறியிருந்தான்.

    13:21-25 .சாட்சி;-ஒரு திராட்டசக் குடலடய இரண்டு ேனிதர்கள் சுேந்து வந்தமத கானின் சசழிப்புக்கு அத்தாட்சியாக இருந்தது. அவர்கள் எஸ்மகால் பள்ளத்தாக்குேட்டும் மபாய், அங்மக ஒமரகுடலயுள்ள ஒரு திராட்சக்சகாடிடய அறுத்தார்கள்; அடத ஒரு தடியிமல இரண்டுமபர் கட்டித்தூக்கிக் சகாண்டு வந்தார்கள்; ோதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்டறக் சகாண்டுவந்தார்கள்

    13:26–14:9 . வினட;-இைண்டுதபர் தபாதவாம் என்றார்கள், ேிகுதியாமனார்,மபாக முடியாது என்றார்கள்.நாற்பது நாள் மதசத்திற்குள் சசன்று வந்தவர்கள், அந்தத் மதசம் ேிகவும் நல்லது என்றார்கள்,அவர்களுள், 10மபர், இஸ்ரமவலர்கடளப் பார்க்கிலும், கானானியர்கள் பலம் வாய்ந் தவர்கள், அவர்களுடன் யுத்தம் சசய்து சவற்றி சபற்றுக் சகாள்ள முடியாது என்று கூறினார் கள். இதற்கு, காமலப்புவும்,மயாசுவாவும் ேறுப்புத் சதரிவித்து, ஒமரயடியாக நாட்டிற்குள் நுடழ மவாம் என்றார்கள், ஆனால் ஜனங்கள் 10 மபர் சகாடுத்த எதிர்ேடறயான அறிக்டகக்குச் சார் பாக நின்றார்கள்.

    14:10-38 .அவர்கைின் அவநம்பிக்குரிய பலன். 40 வருடங்களுக்காக 40 வருடங்கள். இஸ்ரமவலர்களின் அவநம்பிக்டகயால் கர்த்தர் அவர்கள் ேீதுமகாபேடடந்தார். அவர்கள் யாவடரயும் நிர்மூலோக்கிவிட்டு மோமச மூலம் அவருடடய சந்ததிடய உருவாக்குமவன் என்று கர்த்தர் அவர்கடள ேிரட்டினார்.அப்படி ஒன்று நிகழ்ந்தால் கர்த்தருடடய நாேம் எகிப்தியர் ேத்தியில் கனவனீம் அடடயும் என்று கர்த்தருடன் மோமசா வாதாடினார். ( யாத் 32:1-14). அவர் கர்த்தருடடய இரக்கத்திற்காக ேன்றாடினார். இஸ்ரமவலர்கடள ேன்னிப்பதாக கர்த்தர் கூறினார். ஆனாலும், தன்னுடடய வல்லடேகடள கண்டவர்கள், அனுபவித்தவர்கள் யாவரும் என்டன நம்பாேலிருந்தபடியால், அவர்கள் யாவரும் கானான் மதசத்திற்குள் சசல் வதற்கு முன்பு ேரித்துவிடுவார்கள் என்று கூறினார்.ஆனாலும் மயாசுவாவும், காமலப்பு ேட்டும் மதசத்டதச் சுதந்தரிப்பார்கள் என்றார். கர்த்தர் 20 வயதிற்கும் அதற்கு மேற்பட்டவர்களும் ேரிப்பார்கள் என்று குறிப்பிட்டுக் கூறியிருந்தார். (14:29-31).கர்த்தர் சகாடுக்கும் நல்ல மதசத்டத இஸ்ரமவலர்கள் சந்மதகப்பட்டார்கள் அதுேட்டு ேல்லாேல் கர்த்தருடடய வல்லடேயிலும் சந்மதகப்பட்டார்கள்.

  • எண்ணாகேம்

    திராணி 9

    14:39-45 . அவர்கள் மைம் திரும்பிைார்கள்;- இஸ்ரமவலர்கள், கர்த்தர் தங்களுக்கு எதிராக நியா யத் தீர்ப்டப ஏற்படுத்துகிறார் என்று மகள்விப்பட்டமபாது, தாங்கள் பாவம் சசய்மதாம் என்று அறிக்டகயிட்டு, தாங்கள் கானான் மநாக்கி முன்மனற விரும்புவதாகவும் அறிக்டகயிட்டார்கள் .மோமச எச்சரித்தபடியால் அவர்கள் இதடனச் சசய்தார்கள், அதனால் கர்த்தர் அவர்களுடன் இருக்கவில்டல,அதனால் எதிரிகளிடம் பயங்கரோக உபாடதப்பட்டார்கள்.

    15:1-21 கர்த்தனை சாந்தப்படுத்த காணிக்னக ககாடுத்தார்கள்.;-எப்படி தபாஜைபலியும் (தாைியம்மும்), பானபலியும் தகன பலியுடன் சகாடுப்பது என்று அறிவுறுத்தல் சகாடுத்தி ருந்தார். (15:1-16).தகனபலியானது விமேசித்த சபாருத்தடனகளுக்கா,சுயவிருப்புக் காணிக் டகக்கா, பண்டிடகக் காணிக்டகக்காக சகாடுக்கப்படல் மவண்டும் என்றும் அடவ கர்த்தருக்கு சுகந்த வாசடனயாக இருக்கும் என்றும் கூறியிருந்தார் .இஸ்ரமவலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட மதசத்திற்குள் சசன்றவுடன், அங்கு தங்கள் முதற்பலனினாமல கர்த்தருக்கு பண்டிடகடய சகாண்டாடமவண்டும்.

    15:22-29 கர்த்தனைச் சமாதாைப் படுத்தும் காணிக்னக;- அடுத்த அறிவுறுத்தல் அறியாேல் சசய்த பாவத்திற்கான தகனபலிகள். அன்றியும் மதசத்திமல பிறந்தவர்களிலாகிலும் அந்நி யர்களிலாகிலும் எவனாவது துணிகரோய் யாசதான்டறச் சசய்தால், அவன் கர்த்தடர நிந் திக்கிறான்; அந்த ஆத்துோ தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டு மபாகமவண்டும்.

    15:30-36 .சோதானப்படுத்துதல் முடியாேல் மபாகும் மபாது.மவண்டுசேன்று சசய்த பாவத்திற்கான பலி என்ன என்று கூறப்படவில்டல.அந்த ேனிதன் புறம் தள்ளப்படல் மவண்டும் அன்றியும் மதசத்திமல பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரோய் யாசதான் டறச்சசய்தால், அவன் கர்த்தடர நிந்திக்கிறான்; அந்த ஆத்துோ தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுமபாகமவண்டும்(15:30) ஓவ்வு நாடளப் பரிசுத்தக் குடலச்சலாக்குவது கல்சலறிந்து சகாடல சசய்யப்படமவண்டிய பாவோகும்.( 15:32-36

    15:37-41 “கதாங்கல்கனைஉண்டாக்குதல்”.(குஞ்சம்). இஸ்ரமவலர்கள் தங்கள் ஆடடகளில் சதாங்கலகடள (குஞ்சம்) உண்டாக்கமவண்டும்.இது அவர்களுக்கு கர்த்தரின் கட்டடளகடள ஞாபகப்படுத்துவதுடன் அவற்டற தியானிக்கும்படியும் ஞாபகப்படுத்தும்.

    16:1-11 தகாைாகு, தாத்தான், அபிைாம் எதிர்த்தார்கள்.;-மோமசயும், ஆமரானும், 250 தடலவர்க ளினால் விமராதோக்கப்பட்டார்கள்.கிளர்ச்சி மகாகாத்தியனாகிய மகாராவின் தடலடேயில் தாத்தான், அபிராம் உடன்மசர்ந்து நடாத்தப்பட்டது. அவர்கள் கர்த்தர் முன்பாக சகாண் டுவரப்பட்டு யார் தடலவர் என்பது அங்கு தீர்ோனிக்கப்படும் என்று கூறினார்.

    16:12-19 கலகம் கசய்ததார் அனைக்கப்பட்டார்கள்;- “இந்த வனாந்தரத்தில் எங்கடள அழிக்கப்பா ர்க்கிறரீ்”. தாத்தானும், அபிராமும் கர்த்தருக்கு முன்பாக வரேறுத்தார்கள்.அவர்கள் இல்லாேமல கூட்டம் இடம்சபற்றது.. கர்த்தர் தன்னுடடய ேகிடேடய முழுஇஸ்ரமவலர்களின் ேத்தியில் காண்பித்து, முழுவடரயும் அழித்துப் மபாடுமவன் என்றும் எச்சரித்தார்.

  • எண்ணாகேம்

    திராணி 10

    16:20-35 கிைர்சியாைர்கைின் விதி;-வனாந்தரத்தில் அழிக்கப்பட்டார்கள்.மோமச கர்த்தரிடம் ேன்றாடினான், கிளர்ச்சியாளமராடு அவர்களும் அழிந்துமபாகேல் இருப்பதற்காக, கர்த்தர் சடபயார் அடனத்டதயும்,மகாரா, தாத்தான், அபிராம் ஆகிமயாரின் கூடாரத்திலிருந்தும் சவளிமயறும்படி அறிவித்தார். சடபயார் யாவரும் அவர்களுடடய கூடாரத்டதவிட்டு சவளிமயறியவுடமன , நிலம் அதிசயிக்கத் தக்கவிதோகப் பிளந்தது, மகாராகு, தாத்தா ன்,அபிராம் என்பவர்கடள விழுங்கிப்மபாட்டது.ேிகுதியான 250 எதிர்ப்பாளர்களும் அக்கினியால் அழிக்கப்பட்டார்கள்.

    16:36-40 ஞாபகமாக மீள்சுைற்சி கசய்யப்பட்டது.ேரித்துப் மபான கிளர்ச்சியாளர்கள் சகாண்டுவந்த தூபகலசங்கடள எடுத்து, அடவகடளப் பலிபடீத்டத மூடும் தகடுகளாக அடிப்பித்தான். ஆமரானின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடடய சந்நிதியில் தூபங்காட்டவராதபடிக்கும், மகாராடகப் மபாலும் அவன் கூட்டத்தாடரப் மபாலும் இராதபடிக்கும், இஸ்ரமவல்புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் சபாருட்டு, கர்த்தர் மோமசடயக் சகாண்டு தனக்குச் சசான்னபடிமய அடவகடளப் பலிபடீத்டத மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.

    16:41-50 . மரித்ததாருக்கும் ஜவீனுள்கைாருக்கும் நடுவாக நின்றான். , ேரித்துப்மபான கிளர் ச்சியாளருக்காக , ஜனங்கள்,மோமசக்கும், ஆமரானுக்கும் எதிராக குற்றம் சாட்டினார்கள், அதனால் கர்த்தர், ஜனங்களுக்குள் சகாள்டள மநாடய அனுேதித்தார். உடனடியாக மோமச, சடபயாருக்காக பாவநிராணபலி சசலுத்தும்படி ஆமரானுக்கு கட்டடளயிட்டார் .சசத்தவர் களுக்கும்உயிமராடிருக்கிறவர்களுக்கும் நடுமவ நின்றான்; அப்சபாழுது வாடதயும் நிறுத்தப் பட்டது. மகாராகின் காரியத்தினிேித்தம் சசத்தவர்கள் தவிர, அந்த வாடதயினால் சசத்துப் மபானவர்கள் பதிைாலாயிைத்து எழுநூறுதபர். வாடதநிறுத்தப்பட்டது; அப்சபாழுது ஆமரான் ஆசரிப்பு க்கூடார வாசலுக்கு மோமசயினிடத்தில் திரும்பிவந்தான்.

    17:1-13 “தகால்துைிர்க்கும்”;-மகாமராசுடடய கிளர்ச்சியாளர்களினால், ஆமரானுடடய அதிகாரத்திற்கு எதிராக விமராதம் எழுந்தது. ஆமரானின் தடலடேக்காக கர்த்தர் அற்புதோன சாட்சிடய உருவாக்கினார். ஒவ்சவாரு வம்சத்தினுடடய தடலவனிடத்திலும் , ஒவ்சவாரு மகாலாகப்பன்னிரண்டு மகாடலவாங்கி, அவனவன் மகாலில் அவனவன் மபடர எழுதி கர்த்தரு டடய சந்நிதிக்கு முன்டவத்தார்கள், இவற்றுடன் ஆமரானின் மகாலும் டவக்கப்பட்டது. அந்தக் மகால்கடள மோமச சாட்சியின் கூடாரத்திமல கர்த்தருடடய சமுகத்தில் டவத்தான் .ேறு நாள் மோமச சாட்சியின் கூடாரத்துக்குள் பிரமவசித்த மபாது, இமதா, மலவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆமரானின் மகால்துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுடேப்பழங்கடளக் சகாடுத்தது. இந்த சவளிப்படுத்தல், ஆமரானின் ஆசாரியத்துவம் கர்த்தருடடய சதரிவு என்படத புலப்படுத்தியது., இந்தப் பதவிக்கு யாரும் மபாட்டியிட முடியாது. ஆமரானுடடய மகால் பலி படீத்திற்கு முன்பாக டவக்கப்படல் மவண்டும் என் கர்த்தரால் மோமச வலியுறுத்தப்பட்டார்., (17:4, 10)

    18:1-7 .”அவர்கள், அவர்கள் மட்டுதம,உைக்கு உதவ முடியும்”.திரும்பவும் ஒரு முடற கர்த்தர் ஆமராடனயும் அவருடடய பிள்டளகடளயும் ஆசாரியர்களாகத் சதரிவு சசய்தடத உறுதிப்படுத்தின பின்பு, மலவி குடும்பத்தில் ேிகுதியானவர்கள், கர்த்தருடடய மவடலயில் அவர்களுக்கு உதவியாக இருக்கலாம் என்று கட்டடளயிட்டார்.ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்தஸ்தலத்தின் பணிமூட்டுகளண்டடயிலும் பலிபடீத்தண்

  • எண்ணாகேம்

    திராணி 11

    டடயிலும் மசராேல் இருக்க மவண்டும் அவர்கள் கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடட டயயும்சசய்ய, ஆசரிப்புக்கூடாரத்தின் காவடலக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் மசரக்கூடாது.(18:3-4)

    18:8-20 “ இந்தப்பகுதி ஆசாரிகளுக்கு மட்டுமாைது”. கானான் மதசத்தில் நிலம் ஆசாரியர்க ளுக்கு வழங்கப்படாதபடியால்,அவர்களுடடய வருோனம் காணிக்டககளுக்கூடாகமவ கிடடக்கும். ஆசாரியர்களுக்காக வழங்கப்படும் காணிக்டககள் தகனிக்கப்படோட்டாது. இஸ்ரமவல் புத்திரர் நடுவில் நாமன உன்பங்கும் உன்சுதந்தரமுோய் இருக்கிமறன் என்று ஆசாரியர்களுக்கு கர்த்தர் கூறியிருக்கின்றார். (18:20). 18:21-32 .”அவர்கள் உனக்குத் தசேபாகம் தருவார்கள், அதில் எைக்கு நீ தசமபாகம் தரமவ ண்டும். ” கானான் மதசத்தில் மலவியர்களுக்கு நிலம் சகாடுக்கப்படாதபடியால், இஸ்ர மவலர்களுடடய தசேபாகம் அடனத்தும் அவர்களுக்குரியதாகும். அந்த தசேபாகத்தில் அவர்கள் கர்த்தருக்கு தசேபாகம் சசலுத்துதல் மவண்டும்.

    19:1-22 “சிவப்பாைஒருகிடாரியின் சாம்பல்”. சடங்காச்சாரோன சுத்திகரிப்பு, ஒரு சிகப்பான கிடாரி சதரிவு சசய்யப்பட்டு, முகாமுக்கு சவளிப்புறோக சுட்சடரிக்கப்படல் மவண்டும், அதன் சாம்பல்கள் பாதுகாக்கப்படல் மவண்டும். யாராவது சுத்திகரிக்கப்பட மவண்டுோயின், சாம்படல தடவி தண்ணரீுடன் கலந்து அதடனத் அந்த ேனிதன் ேீது சதளித்து சுத்திகரிக் கப்படக்கடவன்.பிமரதத்டதத் சதாட்டவனும், இறந்தவன் வடீ்டுக்குள் சசன்றவனும், பிமரதத்டதத் சதாட்டவனும் சடங்காச்சாரத்தின்படி தீட்டுள்ளவனாவான், அவர்கள் இந்தச் சாம்பலினால் சுத்திகரிகக்கடவர்கள் . இவ்வாறு சுத்திகரிப்பதற்கு ேறுப்பவர்கள் சவளிமயற்றப் படுவார்கள். காடளயின் சிகப்பு நிறோனது இைத்தத்திற்கு அனடயாைமாகும்.

    20:1 .மீரியாமின் மைணம்.வனாந்தர யாத்திடரயின் 40வது வருடத்தின் முதலாம் ோதத்தில் மோமசயின் சமகாதரியான ேீரியாம் ேரணேடடந்தாள். அவமள, இஸ்ரமவலர்கள் கானான் மதசத்டத அடடவதற்கு முன்பு ேரித்த விசுவாசியாத பரம்படரயின் கடடசியாளாகும்.

    20:2-13 .“அவர் தபசும்படி கூறிைார்”, அவர்கள் அதற்குப்பதிலாக அடித்தார்கள்.”. திரும்பவும் இஸ்ரமவலர்கள் நீர் பற்றாக்குடறவினால் கர்த்தருக்கு எதிராக முறுமுறுத்தார்கள்.அவர்கள் தங்களுக்காமவ பரிதாபப்பட்டார்கள், மகாராவின் கிளர்ச்சியில் தாங்களும் ேரித்திருக்கலாம் என்றும் கூறினார்கள், அல்லது எகிப்தில் இருந்திருக்கலாம் என்றும் அங்கலாய்த்தார்கள்.முன்பு ஒரு முடற பானறனய அடிக்கும் படிமோமச கட்டடள சபற்றிருந்தார், அதன்படி தண்ணரீ் கிடடத்தது, (யாத் 17:3-6). ஆனால் இங்கு, மோமசக்கும், ஆமரானுக்கும் பானறயுடன் தபசும்படி கட்டடள சகாடுக்கப்பட்டது. அனால், அவர்கள் மபசுவதற்குப் பதிலாக மகாபத்துடன் பானறனய அடித்தார்கள். இந்தச் சசயற்பாடானது, அவர்கடள, இஸ்ரமவலர்கடள கானான் மதசத்திற்குள் வழி நடத்துவதற்கு தகுதியற்றவர்களாக ோற்றியது.

    காததசிலிருந்து தமாவாப்;- எதிர்பார்ப்பு (20:14–36:13)

    20:14-21 .ஞாயமாை தவண்டுதல், முரட்டுத்தனோக நிராகரிக்கப்பட்டது.சதற்குப்பக்கோக சவக்கடலின் முடிவு மநாக்கி இஸரமவலர்கள் சதன்பக்கோக பிராயாணப்படும்மபாது, மோமச ஏமதாேின் ராஜாவிடம் (ஏசாவின் பரம்படரயினர்) அவர்களுடடய நாட்டிற் கூடாக பிரயாணம் சசய்வதற்கு அனுேதிமகட்டார். அவர்கள் நாட்டுக்கூடாகப் பிரயாணம் சசய்யும்மபாது , அவர்

  • எண்ணாகேம்

    திராணி 12

    களின் வழியில் எந்தவித இடஞ்சல்களும் சசய்யாேல் ,அவர்கள் பாவிக்கும் தண்ணரீுக்கான சபறுேதிடயயும் சசலுத்திச் சசல்வதாகவும் வாக்களித்தார். ஆனால் அந்த அரசன் மோமசயின் மவண்டுமகாடள ேறுத்துவிட்டார்.

    20:22-29ஆதைான் மைணமனடதல். ஆசாரியர்களின் சவளிச்சம் கடந்து சசன்றது .ேரணம் சநருங்குகின்றது என்று எச்சரிக்கப்பட்டார். ஆமரான், அவரது ேகன் எலிமயசர், ேற்றும் மோமச ஆகிய மூவரும் ஓர் ேடலக்கு ஏறிப்மபானார்கள். அங்மகா,மோமச ஆரானின் ஆசாரிய உடுப்டபக் கடழந்துவிட்டார்.,அதடன எலிமயசர் ேீது உடுத்தினார், இது தகப்பனிடேிருந்து ேகனுக்கு ஆசாரியத்துவம் கடந்துசசல்வடதக் குறிக்கின்றது.அங்கு ஆமரான் ேரித்தார், மோமசயும், எலிமயசரும் முகாேிற்கு ேீண்டும் இறங்கி வந்தார்கள்.

    21:1-3 இஸ்ைதவலர்கள் ஆைாத்னத ததால்வியனடயச் கசய்தல்;- ஆராத்தின் அரசன் இஸ்ரமவலர்கடள தாக்கிச் சிலடர சிடறப்பிடத்தார்கள். ஆனால் ேீண்டும் இஸ்ரமவலர்கள் ஆராத்துடன் யுத்தம் சசய்து அவர்கடளத் மதாற்கடித்தார்கள்.

    21:4-9 பாம்பின் பிைச்சனைகள் கவங்கலச்சர்ப்பத்திைால் முடிவுக்கு ககாண்டுவைப்பட்டது. ேீண்டும் இஸ்ரமவலர்கள் குற்றம் சாட்டினார்கள், அதனால் கர்த்தர் மகாபேடடந்து, பாம்புகடள இஸ்ரமவலர்கள் ேத்தியில் அனுப்பினார்.இதனால் பலர் ேடிந்தார்கள். மோமசக்கு, ஒரு சவங் கலச் சர்ப்பத்டத சசய்து அதடன ஒரு மகாலில் தூக்கிடவக்கும்படி கட்டடள கர்த்தரிடம் இருந்து வந்தது. யார் யார் விசுவாசத்துடன் சவங்கலச் சர்ப்பத்டத மநாக்கிப் பார்க்கின்றார்க மளா அவர்கள் பிடழத்துக் சகாள்ளுவார்கள்.இது இமயசுக் கிறிஸ்த்துவின் சிலுடவ ேரணத்தி ற்கு ஒப்பானது. ( மயாவான்3:14).

    21:10-20 . தமாவாப்னப தநாக்கி;- இஸ்ரமவல் புத்திரர் பிரயாணப்பட்டுப்மபாய், ஓமபாத்தில் பாளயேிறங்கினார்கள். அங்மகயிருந்து மபமயருக்குப் மபானார்கள்; ஜனங்கடளக் கூடிவரச்சசய், அவர்களுக்குத் தண்ணரீ் சகாடுப்மபன் என்று கர்த்தர் மோமசக்குச் சசான்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான்.

    21:21-30 இஸ்ைதவலர்கள் சதீகானைத் ததாற்கடித்தார்கள்.அம்மோனிய அரசனிடம், சீமகானுக்கூடாகப் பிரமயணம் சசய்வதற்கு அனுேதி மகட்டார்கள், ஆனால் அவர்கள் ேறுத்துவிட்டார்கள்.இஸரமவலர்கள் அம்மோனியர்களுடன் மபாரிட்டு அவர்கடளத் மதாற்கடித்தார்கள்.;

    21:31-35 ஒக் என்பவனும் அவமராடு மசர்தவர்களும் தடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஒக் என்பவனும் அவமனாடு மசர்ந்தவர்களும் ேரணத்டதத் தழுவினார்கள். ஒக், பாசானின் ராஜாவும் அவனுடடய ஜனத்தாரும், சீமகானும், அம்மோனியர்களால் சசய்ய முடியாதடதச் சசய்ய முயற்சித்தார்கள்- அதாவது இஸ்ரமவலர்கடளத் தடுத்து நிறுத்த முடனந்தார்கள். ஒக் உடன்யுத்தம்சசய்து அவர்கடள இஸ்ரமவலர்கள் கர்த்தரின் உதவியுடன் மதாற்கடித்தார்கள். (சங். 135:10-11; 136:18-20).

    22:1-20 . பாலாக் பிதலயாமுடன் உடன்படிக்னக கசய்தல்.;-காசுக்காக சபித்தல் .இஸ்ரமவல் புத்திரர் பிரயாணம் பண்ணி, எரிமகாவின் கிட்ட இருக்கும் மயார்தானுக்கு இக்கடரயிமல

  • எண்ணாகேம்

    திராணி 13

    மோவாபின் சேனான சவளிகளில் பாளயேிறங்கினார்கள்.பாலாக் மோவாப்பின் அரசன், அம்மோனியர்கடள, இஸ்ரமவலர்கள் மதாற்கடித்தடத அறிந்திருந்தான், அப்படிமய இஸ்ர மவலர்கள் தனக்கும் சசய்யப் மபாகிறார்கள் என்று பயந்தான்.ேீதியான் மதசத்துத் தடலவ ர்களு�